பக்கம்:சீவகன் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை

வாழ்வை விட்டுச் சிறக்க வேண்டும் என்ற உணர்வில் வாழ்வது எவ்வளவு சிறந்தது என்பதைச் சீவகன் வாழ்வின் மூலமே நமக்கு நன்கு விளக்குகின்றார். அனைத் தினுக்கும் மேலாகி, முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதன் அடி தொழுதலே இன்பத்துள் இன்பம் தா வல்லது என்பதையும் அச்சீவகன் வாக்கா லேயே காட்டுகின்றார்; 'இறுதியில் எப்படியும் இறந்தொழியும் இவ்வுடலை விட்டுக் கழிமின்கள்; பொதிந்துவையாது மற்றவர்களுக்குக் கொடுத்து, ஈத்துவக்கும் இன்பம் பெறுங்கள்,' என்று வற்புறுத்துகின்றார்.

இவ்வாறு பல வகையில் எதிர்ப்பட்டாருக்கு மேலும் மேலும் அறநெறியை அறிவுறுத்திச் சீவகன் தன் வழியே சென்றுகொண்டிருந்தான்.

காட்டு வழியிலே:

கேமசரியின் வருத்தத்தைப் போக்கும் வகையில் தன் வெளிப்பாடு சில திங்கள் கழித்துத்தான் நேரும் என்பதைக் குறிப்பால் உணர்த்திய சீவகன், மேல் நடக்கலானுன். குறிஞ்சியும் முல்லையும் மருதமும் கலந்த நெடு வழி அவன் அடிபட்டுப் பின்னடைந்தது. அக்காட்டு வழி அவனை மத்திய நாட்டுத் தலை நகராகிய ஏமமாபுரத்துக்கு அழைத்துச் சென்றது. அவன் அவ்வாறு காட்டு வழியே சென்ற போது நிகழ்ந்த சிறு நிகழ்ச்சியைத் தேவர் பல பாடல்களால் அழகுபடுத்திக் காட்டுகின்றார்; காட்டின் இயற்கை வளத்தையும், பல்வேறு மலர்கள் மலர்ந்து அழகு செய்யும் கவினையும் விளக்குகின்றார்; அத்துடன் அக்காட்டிடத்தே ஓர் இயக்கி சரி தனைக்கண்டு மயங்கிய வரலாற்றையும், அவன் நெஞ்சானன்றிப் பொறியால் நோக்கி நினைவற்று நின்ற நிலையையும், பின்பு அவள் அவனைக் காதல் குறிப்புத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/93&oldid=1485098" இலிருந்து மீள்விக்கப்பட்டது