பக்கம்:சீவகன் கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



                    கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்

93 தோன்ற மருட்டிய தன்மையையும் விளக்குகின்றார்: மேலும், அவள் பவதத்தன் மடந்தையாயிருந்து, அவன் நீர் வேட்கை காரணமாகப் பிரியத் தனித்து நின்ற நிலை யையும் விளக்குகின்றார். மற்றும் வனசரன் அவளுக்கு அறிவுணர்த்து முகத்தான் உலகுக்கு உணர்த்தும் நீதி வனசரன் அவள் தன் அணங்குக்கு மாறு பட்டு வந்தாள் என மருட்டி நின்ற நிலையையும் அழகும் படக் காட்டுகின்றார்; பினபு அவளுக்குரிய பவதத்தன் வந்து தன் காதலியைக் காணாது கவன்ற நிலையைக்கண்டு, சீவகன் இருவர்தம் நிலையையும் எண்ணி, இறுதியில் பவதத்தனை அவன் காதலியுள்ள இடத்தைக் காட்டித் தேற்றி அனுப்புவதையும் கூறுகின்றார். இவ்வாறு வழி வியப்பினையும் கண்ட காட்சிகளையும் கூறிக்கொண் டே நம்மை ஏமமாபுரத்து அருகிலே அழைத்து வந்து விட்டார் தேவர்.

ஏமமாபுரத்து எல்லையில்:

         மத்திம தேசத்துத் தலைநகராகிய ஏமமாபுரத்து எல் லையில் வந்து தங்கியிருந்தான் சீவகன். அவன் அவ்வூர் பற்றியும் அதன் வளம் பற்றியும் அறிய விரும்பினான்; 'யாராவது இவ்வழி வந்தால் கேட்டறியலாம்,' எனச் சிந்தை கொண்டு, ஒரு சோலையில் தங்கியிருந்தான்; அது காலை அங்கு ஒருவன் வர, அவனை அந்நகர் பற்றி வினா வினான். அவனும், அந்நகரின் பெயரையும் சிறப்பையும் கூறினான்; மேலும், வந்தவன் அவ்வூருக்குப் புதியவன் என்பதை அவன் கேள்வியால் அறிந்தமையின், அந்தப் போதில் அங்கேயே தங்கித் தன்னுடன் உணவுண்டு செல்லுமாறு வேண்டினான். ஆனால், சீவகனோ, 'பின் னர்ப் பார்த்துக்கொள்ளலாம்,' என்று கூறி நகரினுள் சென்றான்.

நகரின் நலம் பலவும் கண்டுகொண்டே சென்ற சீவ கன், அந்நகரெல்லையில் அழகாயமைந்த ஒரு சோலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/94&oldid=1483885" இலிருந்து மீள்விக்கப்பட்டது