பக்கம்:சீவகன் கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94

                         சீவகன் கதை

யைக் கண்ணுற்றான்; அதன் வளமும் வனப்பும் அவனைப் பற்றி ஈர்த்தன; அச்சோலையுள் புகுந்து அழகிய பொய் கைக் கரையில் அமர்ந்தான்; தன் கடந்த காலத்தின் செயலையெல்லாம் எண்ணினான் போலும்! அவன் எண் ணத்திலே காந்தருவதத்தையும் குணமாலையும் தோன்றி யிருக்க வேண்டும்.

தடமித்தன் மனையினைச் சார்தல்

              சீவகன் தனியே இவ்வாறு சோலையில் தன் முன் னைச் செயல்களையும் காதல் நினைவுகளையும் எண்ணி எண்ணி உருகும் அதே வேளையில், அந்நாட்டு அரசனான தடமித்தன் மகன் விசயன் என்பான் அச்சோலையில் வந்து சேர்ந்தான். அந்த அழகார் சோலை அரசர்களுக்காக அமைக்கப்பட்டது போலும்! வந்த விசயன், புதிய மனித னான சீவகனைக் கண்டு, அவன் யார் என்றும், அவன் ஊர் எது என்றும், இன்னும் பலவாறும் வினாவினான். சீவகனும் தான் வேற்றுநாட்டான் என்பதையும் நாட்டுக் குப் புதியவனாய் வறிதே வந்ததையும் விளக்கினான். மன்னவன் மகனோ, சீவகன் அழகு அமைதி முதலிய நல்லியல்புகளைக் கண்டு, அவனைத் தன்னுடனே இருத் திக்கொள்ள நினைத்தான்; ஆகவே, அவனைத்தன்னினும் வேறானவனாகத் தான் கருதவில்லை என்றும், அந்நாடும் ஊரும் அவனுடையனவே என்றும், யாதொரு வேறு பாடும் இன்றித் தன்னுடன் தங்கலாம் என்றும் கூறி, அவனை அரச மாளிகைக்கு அழைத்தான்.

அரண்மனைக்குச் செல்லும் வழியில் உயர்ந்த ஒரு மாமரம் இருந்தது. அதிலே ஓர் இனிய கனி தொங் கிற்று. அதனிடத்துத் தனக்குள்ள ஆசையைக் குறித் தான் அரசகுமாரன். சீவகனோ, உடனே அவனிட மிருந்த வில்லும் அம்பும் வாங்கி, ஒரே அம்பால் அக் கனியை வீழ்த்தி, அவன் கையில் கொடுத்தான். அந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/95&oldid=1483893" இலிருந்து மீள்விக்கப்பட்டது