பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதுமையார் இலம்பகம்107“இல்லை, இளநாகம் அவளைக் கடித்தது” என்றான்; “நச்சுப்பல் அச்சுப்பதிவு ஆகவில்லை; மேற்பல்தான் தொட்டு இருக்கிறது” என்றான்.

சுதஞ்சணன் கற்றுத் தந்த மந்திரங்களில் ஒன்று நஞ்சு ஏறினால் இறக்கிவிடுவது என்பது; அது இப்பொழுது அவனுக்குக் கை கொடுத்தது.

விழித்தாள்; விழிகள் சூரியனைக் கண்டன; அவள் தாமரை ஆனாள்; காதல் பார்வை என்பதை ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.

“உன் பெயர்?”

“பதுமம்” என்றாள்.

“அரவு என் கையைத் தீண்டிவிட்டது” என்று மருத்துவரிடம் உரைப்பது போல் அவள் குழைந்து மிழற்றினாள்.

அவள் முகத்தைப் பார்த்தான்; மதி அவன் நினைவுக்கு வந்தது; நிறைமதியாக இருந்தாள்; அது கறைமதி, அரவு அதற்குப் பகை, இவள் முகம் பிறைமதியாக இருந்ததால் அரவுக்குப் பகை இல்லை, அதனால்தான் முகத்தைத் தொடவில்லை; கரத்தைத் தீண்டியது” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

முகத்தோடு முகம் வைத்து முன்னுரை கூறினான். கரத்தோடு கரம் தொட்டுத் தொடர்கதை யாக்கினான். அவள் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை; நாடி பார்க்க அவளை அவன் நாடினான்.

“உன் தங்கை பிழைத்தாள்” என்றான்.

“அதனால்தான் உன்னை அழைத்தேன்” என்றான்.

“யானை குணமாலையைக் கூட்டுவித்தது. நாகம் இவளைக் காட்டுவித்தது” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.