பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 iso அவன் இருந்த ஊருக்கு அடிக்கடி வருவது உண்டு. அவன் கணவன் முத்துமாலையை அவனுக்குத் தெரியும். முத்துமாலை மனைவியைத் தனியாக விட்டுவிட்டு ஒடிப் போன இரவில், காத்தவிங்கம் தற்செயலாக அவ்வீட்டருகே வந்தவன் உள்ளே பயங்கரமான அலறல் எழுவதைக் கேட்டு எட்டிப்பார்த்தான். நிலைமையை எளிதில் புரிந்துகொண் டான். அபலைப் பெண்ணைத் துன்பப்படுத்தத் துணித்த அயோக்கியனுக்கு சரியான பாடம் கற்பிக்க முன்வத்தான்.

  • மனித உணர்வுள்ள எவனும் செய்யக் கூடியக்ாரியம் தான் இது என்று அவன் கூறினான். அவள் அவனை ‘தெய்வம் போல அப்படி இப்படி என்று துதித்து நன்றி கூத முயன்றபோதுதான் அவன் இதைச் சொன்னான்.

அவளது கணவனின் போக்கைப் பற்றி அவள் மூலம் அறிந்ததும், முத்துமாலை அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று மட்டுமே அவன் சொன்னான். அவனை அவள் முன்னிலையில் பழிக்கவோ பரிகசிக்கவோ அவன் விரும்ப வில்லை. அவனைத் தேடிப் பிடித்து உன்னிடமே கொண்டு வந்து சேர்க்கிறேன்’ என்றும் அவன் அறிவித்தான். செல்லம்மா வசதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் குறைவில்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. எனினும் அவள் மனம் நிறைவுறவில்லை. அவள் சதா தன் கணவனைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவனது குணத்தையும் போக்கையும் எண்ண எண்ண அவன்மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தே வந்தது. அவன் தன்னைத் தேடித் திரிவான்; எப்படியும் திரும்பி வந்து விடுவான் என்று அவள் ஆசைப்பட்டாள். இன் து உருவான்... இன்று வந்தேவிடுவான்’ என்று கனவு வளர்த்து வந்தாள். ஆனால், ஒடிச் சென்ற ஒவ்வொரு தினமும் அவன்