பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 0 வல்லிக்கண்ணன் ஆசையோடு வளர்த்த கனவுப் பயிரைத் தீய்த்துச் சென்றது. முன்பு அவள் குடியிருந்த ஊரில் வெடித்த வெறிக்கத்து ஒருவாறு அடங்கியது. அங்கு கட்ட மண்ணும் குட்டிச் கவரும், நாசவேலையை நினைவுபடுத்தும் சின்னங்களும் அலிந்து கிடந்தன. அவற்றின் நடுவே அமைதி கொலு விருக்கத் தொடங்கியது. புத்துயிர்ப்பு சிவிர்த்தது. புது உலர்ச்சி இனிமை பரப்பியது. மீண்டும் அவ்வூரின் வாழ்க்கை பழைய தடத்திலே நகரலாயிற்று. காத்தலிங்கம் அடிக்கடி சகல நிகழ்ச்சிகளையும் அவளிடம் அறிவித்து வந்தான். முத்துமாலை வந்து விடலாம் என்று: தான் அவனும் எண்ணியிருந்தான். நாட்கள் நகர நகர அவனுடைய நம்பிக்கையும் தேய்ந்துகொண்டிருந்தது. முத்து காலை இப்படிப்பட்டவன் என்று நான் தினைத்ததே இல்லை என்று மட்டுமே அவன் அவனிடம் சொன்னான். அவனுக்கு அநாவசியமான சுமையாக இருக்கக்கூடாது என்று எண்ணிய செல்லம்மா பலவித அலுவல்கள் செய்து பணம் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டாள். என்றுமே உழைப்புக்கு அஞ்சியதில்லை. அவள். இருப்பினும், அவனு டை உதவியும் அவளுக்குத் தேவையாகத்தானிருந்தது. மாதங்கள் ஓடின. செல்லம்மாவின் உள்ளத்திலே கணவனைப் பற்றிய வெதுப்பும் விரோதமும் முற்றி விட்டன. அவளுக்குக் காத்தலிங்கத்தின்மீது பற்றுதலும் பாசமும் ஏற்பட்டிருந்தன. "கட்டின பேண்டாட்டியைக் காப்பாற்ற முடியாதவன் புருஷனா? அவனை நான் ஏன் புருஷன் என்று மதிக்க வேண்டும்? நான் இருக்கிறேனோ, செத்தேனோ என்று கவலைப்படாமல் எங்கோ போய்விட்டவனைப் பற்றி நான் ஏன் பக்தியோடும் உரிமையோடும் எண்ணிக்கொண்டிருக்க