பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகன் ) 142 வேண்டும்? என்று அவள் நினைத்தாள். இனி அவன் என் புருஷனுமல்ல. நான் அவன் மனைவியுமல்ல, அவன் என்மீது உரிமை கொண்டாட, அவன் கட்டியதாலி இருக்கிறதாக்கும்? உரிமை கொண்டாடுகிறவன் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டியது அவசியமா இல்லையா? மனைவி கணவனின் உடைமை என்றால், தனக்கு உரியவளை. எந்த நெருக்கடியிலும் எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கு உண்டுதானே? கடமை தவறியவன் பிறகு உரிமை கொண்டாட முன்வந்தால் அதில் ஏதாவது நியாயம் இருக்கமுடியுமா என்ன?...' எண்ணி எண்ணித் தனக்கென ஒரு தடம் அமைத்துக் கொண்டு மேலும் முன்னேறிச் சென்ற அவளுடைய சிந்தனை அப்படித்தான் வாதித்தது. அவள் ஒரு முடிவுக்கு வந்தான். அவளைக் காப்பாற்றத் திராணியோ தெம்போ பெற்றிராத கோழை முத்துமாலை கட்டியிருந்த உகிமைச் சரடை’தாலியை-அறுத்து, தலையைச் சுற்றி விட்டெறிந்தாள் செல்லம்மா. ஆயினும் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிவிட வில்லை. நாட்கள் சாரமற்ற முறையிலே ஒடிக்கொண்டு தான் இருந்தன. செல்லம்மா காத்தலிங்கத்தைப் பற்றி நன்றியுடன் எண்ணி வந்தாள் முதலில். நாளாக ஆக அவனைப் பற்றி தினைப்பதிலும் அவனைப் பார்ப்பதிலும் அவளுக்கு ஒரு ஆனந்தம் ஏற்படலாயிற்று. அவன் உதவியைப் பெறுவதிலும் அவனோடு பேசிக் கொண்டிருப்பதனாலும் அவளுக்குத் தனியானதொரு மகிழ்ச்சி பிறந்தது. அவன் மீது தனக்கு ஆசை வளர்ந்து வருகிறது என்பதை அவளாலேயே மறுக்கவோ மறைக்கவோ முடியாத கட்டமும் வந்து சேர்ந்தது. அவள் பெண். அவள் வாழத்தான் விரும்பினாள். வாழ்வில் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு துணை அவளுக்குத்