பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 29 அம்மா பர்வதமும் அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள். மகளின் தோற்றமே அந்தத் தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது, நெஞ்சில் பெரும் கமையை ஏற்றி வைத்தது. என்ன கமலம், இப்படி ஆயிட்டே ஆளை அடை காளமே தெரியலியே. மெலிஞ்சு கறுத்து...' என்று தான் அங்கலாய்த்தாள். , - மகள் அவள் மீது சாய்ந்து, தோளில் முகம் புதைத்து விம்பினாள். என்னவோ, ஏதோ என்று பதறினர் பெற்றோர். அவளைத் தேற்றி, நல்லது கூறி மெதுமெதுவாக விசாரித் தார்கள். அவள் சொன்ன ஆறுமாதத்துக் கதையே ஒரு மகாபாரத மகா இருந்தது. சந்திரசேகரன் நல்லபடியாக இல்லை. குடிக்கிறான். பணம் வைத்துச் சூதாடுகிறான். கமலத்தின் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் அடகு வைத்து, சூதாடி பணத்தைத் தோற்றுவிட்டான். இப்போது கைவளையல்களைப் பிடுங்க வந்தான். அவள் கொடுக்க மறுத்தபோது, விறகுக்கட்டை பால் அடித்தான். வளையல்களை முரட்டுத்தனமாகப் பிடுங்கிக் கொண்டு போனான். கமலத்தின் கைகள் வீங்கியிருந்தன. வலியிருந்தது முதுகிலும் அடி விழுந்த தழும்புகள். அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தது மாமியாருக்குப் பொறுக்கவில்லை. துடைகாவி, துப்புக்கெட்ட மூதேவி, விடியாமூஞ்சி, தரித்திரப்பீடை, சனிப்பாடை, நீ அடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த வீட்டிலும் மூதேவி புகுந்துவிட்டது. என்மகனும் களை இழந்து, அழகு குலைஞ்சு, சீக்காளியாகி, சந்தோஷமே இல்லாமல் ஆகிப்போனான் என்றெல்லாம்