பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 43. அநேக தடவைகள் விளக்கிச் சொல்லியிருந்த போதிலும்அவர்களுக்குப் புரியாத சங்கதிகள். தங்கள் வீட்டுப் பையன் ராமலிங்கம் பட்டணத்திலே வேலை பார்க்கிறான், திற்ையச் சம்பாதிக்கிறான் என்கிற உண்மைகளே போதும் அவர்கள் சந்தோஷமும் பெருமையும் கொள்வதற்கு. அந்த ராமலிங்கம் தான் விருக்கு வருகிறான். அதை அறிவிக்கும் கடிதம் அவர்களை உற்சாகம் கொள்ளும்படி செய்துவிட்டது. -இன்னிக்கு தேதி என்ன? இருபதா? அவன் இருபத்தஞ்சாம் தேதியா வாறான்? அப்போ இன்னும் அஞ்சு தாள் தான் இருக்குன்னு சொல்லு: இன்னைய தாளைத் தள்ளிப்போட்டா, தாலே நாளுதான்... வாற கிழமையை ஏன் சேர்க்கிறே? அதையும் தள்ளு. ஊடே இருப்பது மூணே மூணு நாள்தான்... அது எப்படி 20 போச்சு. முதல்லேயே அதைச் சேர்க்கலே. 21, 22, 23, 24, ஆக நாலு நாள் முதல்லியே நான் அவன் வாற நாளையும் சேர்க்கல்லே எப்படியும் இன்னும் தாலு நாள் கிடக்கு... இந்த விதமாக ஆளுக்கு ஒன்று சொல்லி, கணக்குப் பண்ணினார்கள். பிறகு பேச்சு வேறு பாதையில் புரண்டது. ராமலிங்கம் மூன்று வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வாறான். அவன் எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருப்பான்? கையிலே எவ்வளவு எடுத்து வருவான்? இந்த ஊரிலே நிலம் வாங்கிப்போட, அந்தப் பணம் போதும்ான அளவு இருக்குமா? இவ்வாறு வீட்டுப் பெரியவர்கள், ஆண்கள், பேசலர் ஒனrர்கள். பெண்களுக்கு வேறு கவலை. அவன் ரொம்பநாள் கழிக்க வாறான். வாறவன் சும்மா வரமாட்டான். சாமான்கள் வாங்கி வருவான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏதாவது வாங்கியாருவான். அப்படி, யார் யாருக்கு என்னென்ன