பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ( i9 பணத்தைப் புடிச்சுக்கிடுறாங்க. ஆப்புறம் வீட்டு வாடகை சாப்பாட்டுச் செலவு-இதுகளுக்கே ரொம்ப ரூபா போயிருது. அடிக்கடி டிரசுக, இதர தேவைகள்னு செலவு பண்ண வேண்டி யிருக்கு. தினசரி ஆபீசுக்கு போக வர பஸ், செலவு வேறே, மாசா மாசம் இங்கே பணம் , அனுப்புறேன். இதெல்லாம் போக மிச்சம் புடிச்சு நிலம் வாங்கவும், வீடு கட்டவும் ஆசைப்பட்டால் அது நடக்கக் கூடிய காரியமா?' என்றான் அவன். உருப்படத் தெரியாதவன்" என்று முடிவு கட்டியது பெரியவர்கள் உள்ளம். ஒவ்வொருத்தன் என்ன மாப் பணம் சேத்துப் போடுறான் வீடு வாசல் நிலம் நீச்சு காருன்னு என்ன தடபுடல் பண்ணுறான்! இவன் பட்டனத்திலே பெரிய வேலையிலே இருக்கான்னுதான் பேரு.பேரு பெத்த பேரு, தாக நீலு லேதுங்கிற கதை தான். தம்பிடிக்குப் பிரயோசனம் இல்லே போ: என்து மனக்கசப்பு கொண்டார்கள். மனிசன் வாழ்க்கை நடத்தவே எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறது. இவங்களுக்கெல்லாம் எங்கே தெரியப் போகுது என்று எண்ணிச் சிரித்தான் ராமலிங்கம். அவன் சிரிப்பை அதிகப்படுத்தும் விதத்தில் குழந்தைகளின் கும்மாளிக் கூச்சல் வெளியே ஒலித்தது. வள்ளி டைரக்ட் செய்து கொண்டிருந்தாள்: ஏய், நான் பாடுவேன். என் கூடச் சேர்ந்து எல்லாரும் பாடணும்...என்ன சரியா?...ரைட், டாடுங்க!” முதலில் அவள் குரல் ஓங்கி எழுந்தது. "யூப் பூ-புளியாம் பூ பறிச்சுப் போட்டா தாழம் பூசி