பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைகுறை அவன் கற்பனைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டான். பிறருடைய கற்பனைகளும் அவனுடைய கயகற்பனைகளும் அவனது சித்த வெளியில் விதவிதமான சலனங்களை உண்டாக்கின. - - அவை பற்றியே அவன் யோசித்தான், பேசினான், கடிதங்களில் எழுதினான். அதனால் அலைமோதிக உள்வும் ரகம்ரகமான, விசித்திரமான கனவுகளை சிருஷ்டிப்பதும் சகஜமாயிற்று. விழிப்பு நிலையிலும், துரக்க நிலையிலுமே தான. - - சூரியனின் வெப்பம் குறைந்து போகும்; அதனால் உலகம்'பூராவும் குளிர்ந்து, பனிக் கட்டிகள் உறைந்து காணப் படும். துருவப் பிரதேசங்களில் வாழ்கிற மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவராசிகளே எங்கும் நடமாட இயலும். இவ்வாறு வான இயல் ஆய்வாளர் அவ்வப்போது எழுதி வருவதை அவன் படித்தபோது அவனுடைய மனம் வெகுவாக பாதிக்கப்பட்டது. - அதைவிட அதிகமான தாக்கம், ஆங்கில நாவலாசிரியன் ஒருவனின் எழுத்தை படித்தபோது அவனுள் நிகழ்ந்தது. ஒரு கதாபாத்திரம் உற்சாகமாக வர்ணிக்கிறான். உலகம் குளிர் மூடிய பரப்பு ஆகிவிடுகிறது. எங்கும் பனிக்கட்டி பரப்பே தான்; வெப்ப நாடுகளில் வசித்த மனிதர்கள் இறந்து விடு கிறார்கள். துருவப் பகுதிகளில் சஞ்சரிக்கிற வெள்ளைக் கரடி, வெள்ளை நரி, விசித்திரமாய் தோன்றுகிற பெங்குவின் பறவைகள், துரந்தரப் பிரதேசங்களில் உயிர் வாழ்ந்து பழகி விட்ட மனிதர்கள் தான் நடமாடித் திரிகிறார்கள்.