பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிச்சம் வாழ்க்கை இருண்டு விட்டதாகத் தோன்றியது. சிவசிதம்பரத்துக்கு. - எங்கும் இருட்டு. எதிலும் இருட்டு. எப்போதும் இருட்டு. - வீட்டிலும் வெளியிலும் ஒளி இல்லை என்றே அவருக்குத் தோன்றியது. அவர் உள்ளத்தில் இருட்டு நிலவியதுதான் காரணம். - - இவசிதம்பரம் இந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று நினைத்தார். மனிதர்கள் எல்லோரும் இயந்திர ரீதியில் செய்ததையே செய்து கொண்டு, எண்ணியதையே எண்ணியும் பேசியதையே பேசியும், பொருளற்ற தன்மையில் பொழுது களை ஒட்டிக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. நேற்றுப் போல் இன்று; இன்று போல் நாளை, என்றும் ஒரே மாதிரித்தான். திடீரென்று ஒரு நாள் மரணம் வந்து அழித்து விடுகிறது. அனைத்தையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது. - பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒவ்வொருவரும் சுயநலத்த்ோடும், சுயப் பெருமையோடும், சுயவிளம்பரத். தோடும் என்னென்ன நாடகமெல்லாம் ஆடித் தீர்க்கிறார்கள்! முடிவில், சாவு வந்து இகாத்திப் போகிறது. இதெல்லாம் எதுக்காக? o- . . வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றால், அந்தப் போராட்டம்தான் எதுக்காக? காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு பயனுள்ளனவும் பயன் இல்லாதனவுமான