பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 9ே வேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு ஏற்பட்டது. கதவுக்கும் பின்னால் மறைந்து நின்று கொண்டு, அவன் வந்ததும் பாவ்' என்று கூச்சலிட்டு அவனை மிரள வைக்கத் திட்ட மிட்டாள். கதவின் பின்னே ஒளித்து கொண்டாள். சிரிப்பு ஊற்றென அவளுள் குமு குமுத்தது. சிரமத்தோடு அடக்கில் கொண்டு நின்றாள். ... 1 செருப்புச் சத்தம் கேட்டது. கால் செருப்புகளைக் கழட்டும் ஒசை தொடர்ந்தது. புஷ்ட பெ.போவ் என்று கத்தியபடி வேகமாக வெளியே வந்தாள். அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அங்கே வந்தவன்- சந்திரன் இல்லை. அவளை கேலி செய்து, அவனது முகமாறுதல்களையும் அழகையும் ரசித்து மகிழ்கிற வேறொரு வாடிக்கைக்காரன் சுப்பையா. கூச்சவிட்டபடி முன்னே பாய்ந்த புஷ்ப்ாவை அவன் கைகள் நீட்டிப் பிடித்து, இழுத்து, இறுக அனைத்தான். அவள் திமிறத் திமிற அவன் பலவந்தமாக முத்தமிட்டான். கூச்சலிட்டு அலற அவளுக்கு பயம். உள்ளேயிருந்து - அம்மாவோ அக்காவோ வந்துவிட்டால்? அவனுடைய செய்கை திகைப்பையும் திகிலையும் வளர்த்தது. மேலும் அவன் என்ன செய்திருப்பானோ! நல்ல வேளையாக சந்திரன் வந்துவிட்டான். ஏய், என்ன இது! ஏ. கப்பையா, என்ன விளையாட்டு? என்று சத்தம். போட்டான். சுப்பையா அவளை விட்டுவிட்டான். க-5