பக்கம்:சுதந்திரமா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சுதந்தரமா!.

'உன்னோடு இவ்வளவு நாள் பழகி இது தெரியாதா? என்று சிரித்தேன்.

“ எடுத்துக் கொண்டு போன பணம் போதவில்லை..." என்று இழுத்தாள் அவள். - . x -

ஏன் ?: . .

' சொல்கிறேன். கல்ல வேளை ' கமலவல்வி கடைக்கு

வந்திருந்தாள். அவளிடம் ஆறு ரூபாய் கடன் வாங்கி னேன். விடிந்ததும் முதலில் அவளுக்குப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரவேண்டும்: -

அவள் கடைக்குப் போனல் எத்தனே எடுத்துக் கொண்டு போனலும் திரும்பி வராது என்பது எனக்குத் தெரிந்த விஷயந்தான். இந்தத் தடவை கடனும் வாங்கியது விசேஷம். ஆனால் அதற்கு மேலும் ஒரு விசேஷம் காத்துக் கொண்டிருந்தது.

வெள்ளித் தம்ளர் வாங்கியைா? என்ன வில் : என்று கேட்டேன்.

வெள்ளிக் கடைக்குப் போகவே முடியவில்லை. புடைவைக் கடையிலேயே போது சரியாகப் போய்விட்டது. நாளேக்குத்தான் வெள்ளிக் கடை போகவேண்டும்."

  • ஒரு ரவிக்கைத் துண்டு வாங்குவதற்கா இத்தனை நேரமும் பணமும் செலவழித்தாய்?" என்று ஆத்திரத் துடன் கேட்டேன். х - .

"ஏன் அப்படிச் சிள்ளென்று விழுகிறீர்கள் வாய் வார்த்தையாகச் சொல்லிக் கொண்டு வருகிறபோதே

'நாயே என்று சொல், கேட்டுக் கொள்கிறேன். பேயே என்று சொல், கேட்டுக் கொள்கிறேன். உன்னல் எனக்கு வேறு பட்டம் என்ன கிடைக்கப் போகிறது ?-ான் கொஞ்சம் கோபக்காரன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/100&oldid=686006" இலிருந்து மீள்விக்கப்பட்டது