பக்கம்:சுதந்திரமா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடையாளம் !

என்னிடம் அடிக்கடி புத்தகம் இரவல் வாங்கிப் போகப் பலர் வருவார்கள். அநேகமாக நேரே புத்தகம் - வைத்திருக்கும் அலமாரிகளை மிகவும் உரிமையோடு. அணுகித் தம்முடைய மனம் போனபடி யெல்லாம் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பார்கள். நான் அதைக் கவனித்துக் கொண்டே இருப்பேன். ஏதடா, இந்த மனுஷன் இருக்கிருனே இவனுக்குச் சொந்தமான புத்தகங்களே இவ்வளவு அலங்கோலமாகக் கலைக்கிருேமே என்று கடுகளவாவது அவர்களுக்கு எண்ணம் இருக்க வேண்டுமே! ஊஹாம். நான் தான் ஒன்றும் சொல்

வதில்லையே! அவர்கள் எதற்காகச் சங்கோசப்பட வேண்டும்?

அவர்கள் கலைத்தால் கலக்கட்டும்; அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் வேண்டிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் பழையபடியே ஒழுங்காக அடுக்கி வைக்கக் கூடாதா? விருந்து சாப்பிட்டவன் எச்சில் இல யைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அது மாதிரி தம் கையிலே எடுத்துக் கொண்ட புத்தகத்தைத் தவிர, மற்றவை கிடக்கும் கோலத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. "கொஞ்சம் புத்தகங்களைப் பழைய படியே அடுக்கி வைத்து விடுங்கள்" என்று சொல்லி விட்டாலோ, நண்பர்களுக்கு ஞாபக சக்தி தீட்சண்யமா கிவிடும். ' அடடா சரியாக ஒன்றரை மணிக்கு அவரை வரும்படி சொல்லியிருந்தேன். மணி ஒன்றே கால் ஆகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/51&oldid=685958" இலிருந்து மீள்விக்கப்பட்டது