பக்கம்:சுதந்திரமா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கலேதுன் ஆனது . 55.

நாள்தோறும் திருவல்லிக்கேணியிலிருந்து காரியா லயத்துக்கு வரும்போது சில காட்களில் இடையிலே ஒரு சேரி வழியே வருவதுண்டு. அந்தச் சேரியில் கால்வா யோரத்தில் ஒரு சிறு மண்குடிசை இருக்கிறது. அது சேரியி லுள்ளவர்களுக்குக் கோயில். கர்ப்பக் கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற கட்டட விசேஷங்கள் இருந்தால் உள்ளே எழுந்தருளியிருக்கும் கடவுளேத் தரி சிக்க முயற்சி வேண்டும், சுத்தம் வேண்டும், சாதி வேண்டும்; காசுகூட வேண்டும். இந்தச் சேரிக் கோவிலில் அவை களில் ஒன்றும் வேண்டாம். கதவுகூட இல்லை. எப்போதும் திறந்திருக்கிறது. வழியிலே போவோர் அனைவருக்கும் அவர்களுடைய முயற்சி சிறிதும் இவ்லாமலே தரிசனம் தந்துகொண்டிருக்கிருர் உள்ளே இருக்கும் கடவுள். r

கடவுளென்ரு சொன்னேன்? வாஸ்தவத்தில் எனக்குக் கடவுளென்று படவில்லே பயபக்தி எழவில்லை; சிறிது பயந்தான் எழுந்தது. அது, இளமையிலிருந்து பெரியோர் கள் பிடாரி முதலிய தெய்வங்களைப்பற்றிச் சொல்லிப் பய முறுத்தியதன் விளைவாக வந்த உணர்ச்சி.

குடிசைக் கோவிலுக்குள் இருந்த சாமியின் திருமேனிதிருமேனியல்ல, வெறுக் தலைமட்டுந்தான் - மண் உருவம்; சுட்ட மண் உருவம். அதன் மீசையும் விழித்த கண்களும். கண்டால் சேரிக் குழந்தைகளுக்கு எப்படி இருக்குமோ தெரியாது; நம் வீட்டுக் குழந்தைகள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவிடும். தலையில் ஒரு கிரீடம்; அதுவும் சுட்ட மண் உருவத்திலே சேர்ந்ததுத்ான். முகத்தில் ஒரு பயங் கசத் தோற்றம். இந்த மூர்த்தியை கான் அவ்வழியே போகும்போதெல்லாம் பார்த்துக்கொண்டு செல்வேன். 'இந்த உருவத்தை வைத்துக் கதை எழுதலாமா? என்ற யோசனை ஒரு நாள் தோற்றியது. அந்த யோசனை உள்ளத் தின் ஆழத்தில் ஒரு மூலையில் கிடந்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/63&oldid=685970" இலிருந்து மீள்விக்கப்பட்டது