பக்கம்:சுதந்திரமா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கவேனுன் ஆனது r 59.

முருகனைச் சக்கிலியத் தெருவுக்குக் கொண்டுபோய் விட் டேன். கதையை முடிக்கவேண்டுமே. பாரதத்தில் கர்ணன் சாபம் பெற்ற செய்தி பாரதப் போரில் அவன் தோல்வி யடையும் வரையில் தொடர்ந்து சென்று பயனளிக்கிறது. இங்கே சாபம் இல்லை; பரசுராமரே இல்லையே கதை எப்படி முடிவது?

பரசுராமர் இல்லாமல் என்ன? அவர் இரண்டு உருவங் கொண்டுவிட்டார். கர்ண்னிடம் அன்பு பாலித்து, தாய் மடியில் உறங்கும் குழந்தையைப்போல, காதலியின் மடியில் இன்பத் துயில்புரியும் காதலனைப்போல, உறங்கும் கிலேயில் இருந்த பரசுராமரைப் பொம்மைக்காரக் கிழவ. னிடம் காணலாமே. சாதி போயிற்றென்று கோபிக்கும் பரசுராமரைத் தனியே பிரித்துக் கிருஷ்ணனிடம் வைத் திருக்கிருேமே! இரண்டாவது பரசுராமர் சாடமிட்டார். கம் கதையிலும் கிருஷ்ண பிள்ளேதான் சாபமிடவேண்டும். சாபமென்ருல் சாபந்தான? ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும். -

என்ன விதமான தண்ட்னே கொடுக்கச் செய்வது? யோசித்தேன். கதையின் சுவாரசியம் இந்த இடத்தில்தான் அமையவேண்டுமென்று எனக்குத் தோற்றியது.

முருகன் தன் கலேயைக் கைவிடாமல் பொம்மை செய் கிருன். இந்தப் பயல் நம் வீட்டிலே கற்றுக்கொண்ட தொழிலினல் லாபம் சம்பாதிப்பான். அப்படிச் செய்யும் படி விடக்கூடாது. இவன் கையை முறித்துப் போட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தொழிலேயே விட்டுவிடும்படி செய்யவேண்டும் என்ற கினேவிலே அந்தத் தண்டனைக்கு ஒர் உருவத்தையும் கண்டு பிடித்து. அமைத்துக் கொண்டேன்.

தண்டனையைக் கலைஞன் ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். கதைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/67&oldid=685974" இலிருந்து மீள்விக்கப்பட்டது