பக்கம்:சுதந்திரமா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுதந்தரமா !

இவனைப் பாராட்டியபோது இவன் பொம்மை செய் வதையே விட்டுவிட்டான். இந்த முரண்பாட்டில் ஒரு ரஸம் இருக்கிறதென்பதே என் கினேவு.

கதை கன்ருக முடிந்துவிட்டது. கலைஞனுடைய கலே யுயர்வைக் காட்டிலும் அவன் தியாக உணர்ச்சி பின்னும் உயர்வாக இருக்கிறதென்ற ஞாபகத்தால் கதைக்கு, 'கலைஞன் தியாகம்' என்று பெயர் வைத்தேன். -

என் வழக்கம், கதை முழுவதும் எழுதி முடித்த பிறகே பெயரிடுவது. கதை எழுத உட்காருகையில் ஒருவித மாகக் கதைப் போக்கைத் தீர்மானித்திருந்தாலும் பேனு வின் போக்கிலேயே புதிய புதிய கற்பனைத் துறைகள் மனத்தில் உதயமாகும். சில சில விவரங்கள் அந்த அந்தக் கணத்தில் தோன்றி உருவாகும். ஆதலால் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே தலைப்பைப் போடுவதுதான் என்னுடைய போக்கில் பொருத்தமாக அமைகிறது.

கலைஞன் தியாகத்தை வாசித்தவர்களிற் சிலர் அவனேத் தியாகியாகப் பண்ணவேண்டா மென்ருர்கள். அவன் தியாகப் பண்ணுமல் கலைக்குரிய சிறப்போடும் சம்மானத்தோடும் வாழவேண்டுமென்ப்து அவர்கள் விருப் பம். உலக வாழ்வில் அப்படி ஒரு கலைஞன் இருந்தால் அவன் கஷ்டப்படாமல் இருக்கும் பொருட்டு அவனேக் கலைச் செல்வனுகவே வைத்திருக்கவேண்டும். என்னுடைய கற்பனைக் கலைஞன் கலைஞகை என்றும் இல்லாவிட் டாலும் சிறந்த லக்ஷ்ய புருஷனுக, தியாகியாக மாறினதில் அவனுக்கு நான் உயர்வளித்ததாகவே கருதுகிறேன். -

கலியுகக் கர்ணகிைய என் கதாநாயகன் ஆரம்பத்தில் சாதியை மறைத்துக் கலை பயில்கிருன். கடைசியில், கர்ணன் பல காலமாகத் தர்மம் செய்து ஈட்டிய புண்ணியத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/70&oldid=685977" இலிருந்து மீள்விக்கப்பட்டது