பக்கம்:சுதந்திரமா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பர ஆசை

தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொள்ள வேண். டும் என்னும் ஆசை மனித சாதிக்கு உடன் பிறந்தது. எத்தனே தான் விரக்தி இருந்தாலும், தியாக புத்தி இருக் தாலும் தன் பெருமையை வெளியிட வேண்டும் என்ற ஆசை போகிறதே இல்லை. குழந்தைப் பருவத்தில் முளைத்த இந்த ஆசை கிழப் பருவத்திலும் விடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் முளைத்ததென்று சொல்வதைவிட, இந்த ஆசை வேதாந்திகள் சொல்வதுபோல உயிரோடு தொடர்ந்து நிற்கிறதென்றே சொல்ல வேண்டும்.

ஆறு வயசுப் பையன் புத்தகம் படித்துக் கொண்டிருக் . கிருன். அவன் என்ன புத்தகம் படிக்கிருனென்று, வீட் டுக்கு வந்த விருந்தினர் கவனிக்கிருர், 'என்ன அப்பா படிக்கிருய்?’ என்று கேட்கிருர், பையன் பெருமையோடு தன் புத்தகத்தைக் காட்டுகிருன். அவனுக்குத் தன் காரி யத்தை விளம்பரப்படுத்திக் கொள்வதில் சந்தோஷம். ஆனால் அந்தப் பையனுக்குத் தம்பி ஒரு குழந்தை இருக் கிருன். அவனுக்கு மூன்று வயசு தன் அண்ணன் புத்தகத் தைப் படிக்கிறதும், அதை வந்த மனிதர் பார்த்துப் பாராட்டுகிறதும் அவன் கண்களில் விழுகின்றன. அவனுக்

குப் புத்தகம் படிக்கத் தெரியாதா என்ன? உடனே ஒரு

புத்தகத்தை எடுத்துக்கொண்டு தன் காலே நீட்டி அதன் மேல் வைத்துக்கொண்டு கா, கீ என்று கத்துகிருன். புத்த கத்தைப் பார்த்துச் சத்தம் போடுவதுதான் படிக்கிறது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கிருன். விருந்தினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/72&oldid=685979" இலிருந்து மீள்விக்கப்பட்டது