பக்கம்:சுதந்திரமா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவை த் தலைவர்

மேடைப் பேச்சுக்கு இந்தக் காலத்தில் பெரிய மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசியலானலும் சரி, இலக்கிய மாலுைம் சரி, கலே, தத்துவம் எதுவானுலும் சரி, மேடை யிலேதான் இப்போதெல்லாம் வளர்கின்றன. மேடை யிலும் பலவகை உண்டு. வெளியூர் மேடைகளுக்கும் சென்னை மேடைக்கும் வேற்றுமை பல. சென்னையிலே இருபது பேரை வைத்துக்கொண்டு அகில் லோக மகாநாடு கடத்திவிடலாம். கூட்டம் வந்ததோ இல்லையோ, பத்திரி கைக்காரர்கள் தயவு மாத்திரம் இருந்தால் பத்தி பத்தியாக மகாநாட்டுச் செய்திகள் பத்திரிகைகளில் வந்துவிடும். வெளியூர்க்காரர்கள், லட்சக்கணக்கில் கூட்டம் வந்த தாகவும் வெகு விமரிசையாக மகாகாடுகள் கடந்ததாகவும் எண்ணிக் கொள்வார்கள். -

மகாகாடோ, அல்லது சாதாரணக் கூட்டமோ எது ஆலுைம் அவைத் தலைவர் அவசியம். அவைத் தலைவரைப் பொறுக்குவதில் சபை கூட்டுகிறவர்களுக்குச் சங்கடம் கேர்வதுண்டு. கூட்டத்துக்குத் தகுந்தபடி தலைவர். வேண்டும். சொற்பொழிவாளர்களுக்கு ஏற்றபடி கூடத். தலைவரைத் தேடும்படி இருக்கும். யானையைப்போலப் பெரிய சொற்பொழிவாளரைப் பேசக் கூப்பிட்டுவிட்டு எலியைப்போல நாலு பேருக்குத் தெரியாத தலைவரைப். போட்டால் கூட்டம் ரளிக்காது. சொற்பொழிவாளர் பேச வரமாட்டேனென்று சொன்னலும் சொல் விடுவார். - o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/88&oldid=685994" இலிருந்து மீள்விக்கப்பட்டது