பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஐந்துமுதல் எட்டுவயதுள்ள பாலகைத் தோன்றும் இந்த நூற்றெட்டு மாற்றுள்ள பொன் வடிவம் சித்தி களெல்லாம் ஏவல்செய்யும் அருள் வல்லபம் உடை யது. ஆயினும், சித்திகளே அவாவியிடேல் என்று ஆண்டவன் தமக்கு அறிவுறுத்தியதாகக் கூறு கின்றனர். அமுதவகைகளிற் சிறந்த அருளமுதம் உண்ணுவதும் இந்நிலையில்தான். அருளனுபவம் கைகூடுதலும் இங்கேதான். இதற்கு அருள் வெளி என்று பெயர். அருள்வெளி நான்காக விரியும். அவை பரவெளி, பரம்பரவெளி, பராபரவெளி, அருட் பெருவெளி எனப்படும். இவ்விடத்திற்குச் சிற்றம் பலம் என்றுபெயர். பரம்பரவெளிக்குமேல் அருளனு பவம் மீதுாரப்படும். அருள் உருவத்தின் அனுபவ நிலையைக் குருதுரியம் என்பர். இதற்கும் மேலான அனுபவங்களை விழைந்து நிற்கும் அருளே வடி வான ஆன்மா அருட்பெருஞ்ஜோதிப் பெருமானே ஏத்திப் பரவி, கண்டுகளித்து, அணேந்து இன் புறும். அப்போது முழுமுதற் கடவுளாகிய ஆனந்தத் தெய்வம் அனைத்து வகையாலும் அருள்சுரந்து ஆன்மாவில் கலக்கும். இப்புணர்ச்சியை விதந்து கூறும் பாடல்களும் பல உள்ளன. துரங்காதே விழித்திருக்குஞ் சூதறிவித் தென யாண்ட துரையே யென்னை நீங்காதே யென்னுயிரிற் கலந்துகொண்ட பதியே -திரு 6:113: 4 அன்பே என்னரசே திரு அம்பலத் தாரமுதே என்பே யுள்ளுருகக் கலந் தென்னுள் இருந்தவனே -திரு 6 : 57 : 3