பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 களுக்கு ஏற்ப அமைத்துக்கொண்ட பெயர்களே என்பதும், இவையனைத்திற்கும் மேலாக உள்ள கடவுள் ஒருவரே என்பதும், சுத்த சன்மார்க்கத்தில் அருட்பெருஞ்ஜோதி, சுத்த சிவம் என வழங்கும் பெயர்கள் முழுமுதற்றெய்வமாகிய ஒப்பற்ற கடவுளைக் குறிப்பன என்பதும் போதரும். திருவருட்பா திருமுறைகளில் அ ரு ள ா ம் பெருஞ்ஜோதி, அரும்பெருஞ்ஜோதி, அருட்ஜோதி என்ற பெயர்களுடன் அருட்பெருஞ்ஜோதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆறந்த நிலைகளில் எல்லாம் சிறப்பித்து ஒதப்பெறும் பெரும்பொருளே அருளாம் பெருஞ்ஜோதி கொண்டறிதல் கூடு மென்றும், " அருட்ஜோதி அளித்தனையேல், பெரியசிவபதியே ! நின் திறத்தை அறிந்துகொள் வேன் ’’ என்றும் அடிகள் குறிப்பிடுகின்றனர். ஆதலின், அருட்ஜோதியால் அறியப்படுகின்ற பெரும்பொருள் பெரியசிவபதி என்று அறிய வேண்டும். அருட்ஜோதி, அருளாம் பெருஞ்ஜோதி என்ற பெயர்கள் திருவருளேக் குறிப்பன. பூரண திருவருளேக்கொண்டு, அஃதாவது அருட்ஜோதி கொண்டு அறிந்து அனுபவிக்கப்படுவது அருட் பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதியே ஒன்ருன முழுமுதற்றெய்வம். ஆண்டவன் என்றும், கடவுள் என்றும், சுத்த சிவமென்றும் அருட்பெருஞ்ஜோதி குறிப்பிடப்படுகின்றது.