பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தவருத வேதாந்த சித்தாந்த முதலாச் --- சாற்றுகின்ற அந்தமெலாந் தனித்துரைக்கும் பொருளை இவருத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் இருந்தருளாம் பெருஞ்ஜோதி கொண்டறிதல் கூடும் -திரு. 6 : 38 90 பெரியசிவ பதியேநின் பெருமையறிந் திடவே பேராசைப் படுகின்றேன் பித்தர்களிற் பெரியேன் கரியமணித் திறத்தினையுங் காணவல்லே னல்லேன் கண்மணியே நின்றிறத்தைக் காணுதல்வல் லேகுே அரியபெரும் பொருளாமுன் னருட்ஜோதி யெனக்கே அளித்தனையே லறிந்துகொள்வே னளித்திடுக விரைந்தே -திரு. 6:24:3 உன்கணவர் திறம்புகலென் றுரைக்கின்ருய் நீதான் உத்தமஞர் அருட்ஜோதி பெற்றிடமுன் விரும்பே -திரு. 6 : 82 . 29 திருவருளாகிய பேரொளிகொண்டு எல்லாம் சிவமயம் எனவும்,எல்லாம் தாமெனவும் உணர்வது சன்மார்க்கநெறி ஆகும். இவ்வுணர்ச்சி பரதுரிய அனுபவநிலையில் உண்டாகும். “ சிவதுரிய அனு பவமான மெய்ம்மையே சன் மார்க்கமாம் ” என்ற படியால் அருள் ஒளியின் துணைகொண்டு இந் நிலையை அடையவேண்டும். இந்நிலைக்குச் சென்று சன்மார்க்க நெறியில் நிற்பதற்கு ஆண்டவன் அடி களுக்கு அருட்ஜோதி வழங்கினன். எல்லாப் பேறு களிலும் அரியதும் பெரியதுமான பேறு அருட்