பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 றுக்கு அடுத்த வீராசாமிப்பிள்ளைத் தெருவில் 39 எண்ணுள்ள தம் வீட்டுமாடியில் உள்ள அறைக் குட் சென்றனர். நம் பெருமான் திருவிளக்கை ஏற்றிக் கண்ணுடியில் கண்கொட்டாமல் ஆண்ட வனை வேண்டி நின் ருர். கட்டவிழ்ந்த கமலம் போலக் கருத்தலர்ந்து வழிபட்ட அவர் கருத்தி னுடே உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும் ஓங்கிநின்ருன் ஆண்டவன். சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும்.நற் கோழிக் கொடியுமருள் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே -திரு. 5 : 1 : பிரார்த்தனை மாலை-1. என்று தாம் கண்களிக்கக் கண்டதைக் கூறு கின் ருர். கண்ணுல் யானுங்கண்டேன் காண்க” என்று மணிவாசகர் கூறியதுபோல நமது பிள்ளைப் பெருமான் தணிகை முருகப்பொருமானேக் கண் களாற் கண்டார். முருகப்பெருமான் வடிவில் எழுந் தருளிய எல்லாம்வல்ல தெய்வம் எல்லாக் கல்வி யையும் எல்லாக் கலைகளையும் நம் பெருமானுக்கு விளக்கி அருளிச்செய்தது. இந் நிகழ்ச்சிக்கு முன்னும் பிள்ளைப்பெருமான் தாமே ஆண்டவனைப் பாடும் பேறுபெற்று விளங்கினர். ஆதலின், இவர் ஒதாதுணர்ந்தார் என்று சொல்லுவதில் யாதும்