பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஏடகத்தே எழுதாத மறைகளெல்லாம் களித்தே என்னுளத்தே எழுதுவித்த என்னுரிமைப் பதியே -திரு. 6: 53:8 என்றும், ஒதிஉணர்ந் தவரெல்லாம் எனக்கேட்க எனைத்தான் ஒதாமே உணர்ந்து உணர்வா முருவுறச் செய்யுறவே என்றும் கூறுமாறு காண்க. மற்று, படித்தேன்பொய் உலகியல்நூல் எந்தாய் நீயே படிப்பித்தா யன்றியுமப் படிப்பி லிச்சை ஒடித்தேன் நான் ஒடித்தேனே ஒடிப்பித்தாய் -திரு. 2: 5; 73 என்றும், படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல் | படித்தவர் தங்களைப் பார்த்து நொடித்தனன் கடிந்து நோக்கினேன் - திரு. 6:29: 12 என்றும், படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கி -திரு. 6: 52; 8 என்றும், படித்தவென் படிப்புங் கேள்வியு மிவற்றின் பயனதா முணர்ச்சியு மடியேன் -திரு. 6. 132; 10 என்றும் கூறியவாற்ருல் பிள்ளைப்பெருமான் உலகியல் நூல்களைப்புரட்டிப்பார்த்திருக்கக்கூடும்.