பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 அதுவும் ஆண்டவன் படிப்பித்தான். அப்படிப்பில் இச்சையின்றி அவனிடம் படிக்க ஆசைப்பட்டி ருக்க ேவ ண் டு ம். ஆல்ை, இவையனைத்தும் ஒன்பதாம் ஆண்டிற்குள்ளே நிகழ்ந்தவை. அறு முகப்பெருமானைக் கண்டபோது எல்லாக்கலைகளும் அவருடைமையாயின. படித்தும் கேட்டும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆதலின், கல்வியனைத்தையும் பெருமான் ஒதாதுணர்ந்தார் என்பதற்கிழுக்கில்லை. அவரது அண்ணியார் உகுத்த கண்ணிருக்கு ஆற்ருத பெருமானுக்குக் கண்ணுடியில் கடவுள் காட்சி கொடுத்தது அவர் படிப்புக்குத்தானே! அன்றி வடமொழிப் புலமை எங்கிருந்து வந்தது? நம்பெருமானுக்குக் கண்ணுடியில் முருகப் பெருமான் தமது இளநலங்காட்டி அருளியதாலும், ஐந்தாந் திருமுறைப் பெ ரும் பகு தி முழுதும் ஆறுமுகக்கடவுளேப்பற்றியதாக இருப்பதலுைம் ஒருசிலர் கந்தப்பெருமானே அடிகளுக்குக் குரு வென்பர். மற்றுஞ்சிலர், “ஞானசம்பந்தன் என்னு மென் சற்குருமணியே ’’ என்றும், திருநெறித் தமிழ் கொண்டு ஐயநீக்கியருளிய அரசே” என்றும் கூறுவது கொண்டு ஞானசம்பந்தப் பெருமான் தான் அடிகளுக்கு உற்ற குரு என்பர். வேறுசிலர் அன்புருவம், அருளுருவம், இன்புருவம் ஆகிய முத்திறல் வடிவங்களையும் மணிவாசகப்பெருமான் பெற்றவண்ணமே அடிகளும் பெற்றனராதலின் மணிவாசகரைத்தான் அடிகள் கு ரு .ெ வ ன க் கொண்டனர் என்ப.