பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 உண்மை விளங்கிய அடிகள் உலக அன்னையின் கருணையை எண்ணி ஆனந்தப் பரவசம் அடைந் தனர். இவ்வற்புத நிகழ்ச்சியை, அன்ருெருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது நன்றிரவிற் சோறளித்த நற்ருய் காண் -திரு. 1 : 3: 176 எனவும், தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் திருவமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ வென்றெனையங் கெழுப்பி உவந்துகொடுத் தருளியவென் னுயிர்க்கினிதாந் தாயே. பற்றியவென் பற்றனைத்தும் தன்னடிப்பற் ருகப் பரிந்தருளி யெனையீன்ற பண்புடையெந் தாயே பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் பெருநடஞ்செய் யரசேயென் பிதற்றுமுவந் தருளே -திரு. 6 : 38 : 43 எனவும் கூறுவன காண்க. " இத்திருப்பாட்டில் உலகப் பேரன்னே சுவாமி களின் பசிக்காற்ருது திருக்கரத்தில் திகழ்வள் ள த்தில் திருவமுதம் ஏந்தி வந்தாள் என்றுதானே குறிப்பிடப்படுகின்றது ; தாமரையிலையில் என்று கூறுவது எங்ங்னம்? ’’ என்று சிலர் வினவுவர். தாமரையிலையில் வெண்பொங்கல் கொடுத்த தாகவே M. கந்தசாமி முதலியாரும், பிறையாறு சிதம்பர சுவாமிகளும் பிறரும் கூறியுள்ளனர்.