பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சார்ந்ததாகவே சாலை உண்டாயிற்று என்று எண்ணலாம். தொழுவூர் வேலாயுத முதலியாரும் தமது திருவருட்பா வரலாற்றில் (32) " சமரச வேத சன்மார்க்க சங்கம் ' என்றே குறிப்பிடுகின் ருர், திருவருட்பா முதலில் வெளியிட்டபோது (1872) அதிலும் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவருட்பாவில் சங்கத்தைப்பற்றிய பாடல் கள் சில உள்ளன. அவற்றுள் சங்கத்தார் பெருமை சிறப்பித்துப் பேசப் படு கி ன் றது. " சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காண... என் உடல் ஆதிய எல்லாவற்றையும் உமக்கே தந்தனன் ” என்று ஆண்டவனிடம் சத்தியஞ் செய்கின் ருர் (6: 68 : 8). "சுத்தசன்மார்க்க சங்கத்தவரெல்லாம் மாலே மாஆலயாக வந்து சூழ்கின்றனர் : அருட்பெருஞ் ஜோதித் தெய்வமே ! பள்ளி எழுந்தருள்வாய் ” என்று பாடுகின் ருர் (6: 65:2). மரணமெனும் பெரும்பாவியைச் சமரச சன்மார்க்க சங்கத்தவர் களால் அல்லாது, எற்றிநின்று தடுக்கவல்லவர் எவ்வுலகிலும் யாருமில்லை என்று எச்சரிக்கை செய்கின்ருர் (6:110 : 24). அருள் ஒளி நெறியில் நின்று அதில் பேரனுபவங்களைப் பெற்று, ' சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்' என்று கூறி மகிழ்கின்ருர். இன்னும் மேல்நிலை அனுபவ மான புறப்புணர்ச்சியில் ப்ொன் வடிவந்தாங்கிய அடிகள் என் திருக்கணவருடன் சமரச சன் மார்க்கத் திருச்சபைக் கண்ணுற்றேன் ” என்றுங் கூறுகின்ருர் (6 : 82 : 97) s