பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 னத்தை அடிகள் மேட்டுக்குப்பத்தில் இருந்த படியே செய்வித்தார்கள். ஒவ்வொரு திரையை யும் விலக்கும்போது கற்பூரங் கொளுத்திக் காட்டு வதன்றி வேறு எந்த வழிபாட்டுமுறையும் கூடாது என்று விதித்தனர். அப்போது மன நெகிழ்ச்சி யோடு ஆண்டவனுடைய தோத் திரங்களே அமைதியாகவும் அன்போடும் பாடுவதுதான் சன்மார்க்க லட்சியமுள்ள வழிபாடு என்று. அறிவுறுத்தினர். ஞானசபையில் சன்மார்க்க வழிபாடு மாதப் பூசந்தோறும் முறையாக நிகழ்ந்துவந்தது. எனினும், அடிகள் மேட் டு க்கு ப் பத் திலேயே இருந்து பதிகம் பாடிவந்தனர். ஞானசபையில் வழிபாடு ஒழுங்காக நடப்பதற்கு வேண் டி அடிகளார் ஆங்கிரச ஆண்டு ஆடி ஐந்தில் (18-7-1872) ஞானசபை விளக்கப் பத்திரிகை எழுதியனுப்பினர்.