பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கொண்டாயினும், உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். துாசு துடைப்பிக்கப் புகும்போது நீராடிச் சுத்ததேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்காலிட்டுக் கொண்டு, துரசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்றபோதும் இங்ங் ன மே செய்விக்க வேண்டும். விளக்கு வைத்தற்கும் துரசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயத்துக்குட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும் பொருள், இடம், போகம் முதலிய வற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய், தெய்வ நினைப்புள்ளவர்களாய், அன்புடையவர் களாயிருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும் போதும், துரசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள், புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். யாரும் யாதொரு காரியங்குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது. அத்திறவுகோலை வேருெரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி, .ெ பா ற் ச ைபக் குள் வைத்து, அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவலுத்தரவாதியாயிருக்கின்றவர் கையில் ஒப்பு வித்தல் வேண்டும். தொடர்ச்சி, காலம் நேர்ந்த தருணம் எழுது கிறேன். ஆங்கிரச-us * இப்படி, ஆடி.மீ 5வ. சிதம்பரம் 18–7–1872 இ ரா ம லிங் கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை