பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அசோக வனத்தில் சீதையின் நிலைமை 1. துயர நிலை : அசோகவனத்தில் இருந்தபோது சீதை மிகவும் மனம் நொந்து காணப்பட்டாள். அவளது துயரம் மிகவும் இரங்கத் தக்கதாயிருந்தது. கற்கட்கு நடுவே மழைத்துளி காணாமல் வாடிய மருந்துச் செடி போலவும், வெயிலிடைத் தெரியா விளக்கு போலவும், அரக்கியர் நடுவே புலிக்குழாத்திடையே அகப் பட்ட மான் போலவும் காணப்பட்டாள். அழுதல் விழுதல் விம்முதல் அன்றி வேறு அறியாள். தொடர்ந்து அழுவதால் கண்ணிலிருந்து அருவி போல் நீர் பொழிய, மழைக்கண்' என்பது காரணப் பெயர் ஆயிற்று. (பெண்களின் கண்களை மழைக்கண் எனல் மரபு). இராமனை நினைந்து நினைந்து அழுதலால் நனைந்த உடை உடல் வெப்பத்தால் காய்ந்து போகிறது. இவ்வாறு நனையவும் காயவுமாக இருந்தாள். கண்கள் நான்கு பக்கமும் அளந்தண-சடை முறுக்கிக் கொண்டது-உடையன்றி வேறு அணிகலன்கள் இல்லை. நீராடவில்லை.