பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 .சிந்தையாலும் தொடேன் என்பதிலேயே, இராமன் அவ்விருவரையும் இபபோது சிந்தையால் தொட்டதல்லாமல் சொல்லாலும் குறிப்பிட்டுள்ளானே! எனவே, இப்பொருள் பொருந்துமா? இரண்டாவது மாதரை என்று கூறாமல், இருமாதரை என்று கூறியிருப்பதே இங்கே குழப்பத்திற்குக் காரண மாகும். செய்யள்-யாப்பு அமைதி நோக்கி, 'இருமாதர்' என்னும் தொடரிலேயே இரண்டாவது மாதர் என்னும் பொருள் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம். இரு மாதரைத் தொடேன் என்றால், சீதையாகிய ஒரு மாதரைத் தவிர மேலும் ஒரு மாதரை விரும்பேன் என்று கூறியதாகப் பொருள் செய்யக் கூடாதா என்ன? திருமாலின் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி நூலாசிரியர் கட்குத் தெரியும்-கம்பருக்கும் தெரியும். கிருஷ்ணன் ஒருவர்க்கு மேற்பட்ட பல மாதர்களை மணந்து கொண் டான். திருமால், இராமாவதாரத்தைப் போல் சிக்கனமாக இல்லாமல், கிருஷ்ணாவதாரத்தில் சிறிது தாராளமாக நடந்து கொண்டார். அதன்படி, அப்பிறவியைப் போல், இன்றி இப்பிறவியில் இரு மாதரைத் தொடேன் என்று. கூறியதாகக் கொள்ளக் கூடாதா என்ன? இவ்வாறு, கூறின், பூதேவியையும் நீளாதேவையையும் இங்கே வம்புக்கு, இழுக்கவேண்டியதில்லையல்லவா? இராமாவதாரத்திற்குப் பி ன் பல் ல வா திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்தார்? கிருஷ்ணாவதாரத்தில் பல. மனைவியர் இருப்பர் என்பது இப்போதே இராமனுக்கு எவ்வாறு தெரியும்?-என்று வினவலாம். திருமால்தான் இரு பிறவிகளையும் எடுத்தவர் ஆதலின், அவருக்குப் பின்னால் நடக்கப் போவதும் தெரியக்கூடும் அல்லவா? மற்றும், பிற்காலத்து நூலாசிரியர்கட்குக் கிருஷ்ணாவ தாரத்தைப் பற்றித் தெரியும். ஆதலின், அவர்கள் அதை மனத்தில் வைத்துக் கொண்டு இவ்வாறு எழுதியிருக்கலாம். அல்லவா?