பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மற்றும், இந்திரன் மகன் காகமாக வந்து முறையின்றி நடந்து கொண்டபோது படை செலுத்திக் காகத்தின் ஒரு கண்ணைப் போக்கியதை, யான் சொன்னதற்கு அடையாள மாக நினைவு செய்க. யான் என் உயிர்போல் வளர்த்த கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவரிடம் கேட்டபோது, அவர், மிகவும் அன்போடு, என் மாசில்லாத தாயாகிய கைகேயி யின் பெயரை வை என்று கூறியதையும் யான் நினைவு செய்ததாகச் சொல்லுவாயாக என்றாள்: 'என்ஒர் இன்னுயிர் மென்கிளிக்கு யார் பெயர் ஈகேன்? மன்ன என்றலும், மாசறு கேகயன் மாது என் அன்னை தன் பெயர் ஆக என அன்பினோடு அந்நாள் சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்” (78); இப்பாடலில் இராமனது உயர் பண்பு அறிவிக்கப் பட்டுள்ளது. பிறகு தன்னை முடி துறந்து காட்டுக்கு அனுப்ப இருக்கும் கொடியவளாகிய கைகேயியின் பெயரைக் கிளிக்கு வைக்கச் சொன்னதாக அறிவித் திருப்பது ஒருவகைக் காப்பியச் சுவையாகும்.