பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கம்பர் ஒரு பம்பர விளையாட்டுக் காட்டியுள்ளார்" பம்பரத்தைக் கயிற்றால் சுற்றி வீசினால் 'கர கர' எனச் சழலும். இங்கே, அனுமன் தன் வாலாகிய கயிற்றினால் கிங்கரராகிய பம்பரத்தைச் சுற்றி எறிய அவர்கள் கீழே விழுந்து சுழன்றனராம்: "கொற்ற வாலிடைக் கொடுந்தொழில் அரக்கரை அடங்கச் சுற்றி வீசலின் பம்பரம் ஆமெனச் சுழன்றார்' (கிங்கரர் வதைப் படலம்-30). அனுமன் மேல் அரக்கர்கள் விட்ட படைக்கலங்கள், அனுமனை ஒன்றும் வருத்தாமல், சுட்ட இரும்பால் பட்ட டைக் கல்லை அடிக்கும்போது பட்டடைக்கல் சுடப் படாமல் பொறிகள் பறத்தல் போல் சிதறிப் போயினவாம். பாசப்படலம்: "வட்ட வெஞ்சிலை ஒட்டிய வாளியும் வயவர் விட்டவிட்ட வெம்படைகளும் வீரன்மேல் வீழ்ந்த, சுட்ட வல்லிரும்பு அடைகலைச் சுடுகலாதது போல் பட்டபட்டன திசையொடும் பொறியொடும் பரந்த." (32), இந்திரசித்து அனுமனைப் பாசக் கயிற்றால் கட்டி இழுக்கிறான். இதைக் கொண்டு தேவர்கள் மந்தர மலை யில் வாசுகி என்னும் பாம்பைச் சுற்றிக் கடல் கடைந்த நிலையைக் கம்பர் உருவகித்துக் காட்டுகிறார். இலங்கை நகரம் கடலாம். அனுமன் மந்தர மலையாம், அனுமன் மேல் சுற்றச் செய்த பாம்பு வாசுகியாம். அரக்கர்கள் தேவர் களாம். இது கம்பரின் கற்பனை பாடல் : 'குரக்கு நல்வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி இரைக்கு மாநகர் எறிகடல் ஒத்தது; எம் மருங்கும்