பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இன்னொரு முறை இராவணனைக் கீழே அழுத்தக் கயிலை மலை சென்றது போலவும் அனுமன் காணப் பட்டான். 'அண்ணல்வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னம் என்னா கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியும் ஒத்தான்'. (25) கேடு சூழும் இராவணனுக்குக் கேடு காலம் வந்துவிட்ட தென்பதை அறிவிக்கும் அறிகுறியாக ஞாயிறு கிழக்கி லிருந்து புறப்படாமல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்றால் எப்படியோ-அம்மாதிரியில் அனுமன் தென்னிலங்கை நோக்கிப் பாய்ந்தான்: 'கெடக் குறி ஆக மாகம் கிழக்கு எழும் வழக்கு நீங்கி வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான்” (28) உலகம் அழியும் ஊழிக் காலத்தில் வடக்கே எழும் முழு நிலவைப் போன்றான்: 'ஊழிநாள் வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான்’ (30) இலங்கையை இருள் கவ்வல் ஞாயிறு மறைந்ததும் இலங்கையை இருள் கவ் விக் கொண்டதைக் கம்பர் ஊர் தேடு படலத்தில் சுவையாகக் கற்பனை செய்துள்ளார்: இராவணனது தீவினை (பாவம்) சூழ்ந்து கொண்டது போலவும், சிவன் உரித் யானையின் கரிய தோலால் போர்த்தது போலவும், அரவு அரசன் உமிழ்ந்த கரிய நஞ்சு குழ்ந்து கொண்டது போலவும், ஞாயிறு மறைந்ததும் இலங்