பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 என்பது பாடல் பகுதி. கருடன் மேல் திருமால் அமர்ந்: திருப்பது போன்று, அனுமன் தோள் மேல் இராமர் அமர்ந் திருப்பாராம்: 'விண்ணுறு கலுழன் மேல் விளங்கும் விண்டுவின் கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால்' (72). அரக்கர்கள் அனுமனால் நெருக்கப்பட்டு, அரைக்கும் பொறி (இயந்திரம்) யிடை அகப்பட்ட கரும்பு போல் நசுங்க, அவர்தம் குருதி கருப்பஞ்சாறு போல் கடலில் கலந்தது. 'நிருதர் எந்திரத் திரு கரும்பாம் என நெரிவார் குருதி சாறெனப் பாய்வது குரைகடல் கூனில்' (40) கம்பர் புண்கள் நிறைந்த அனுமனுக்கு ஒரு புது {... _ 6)j6ú) Lß தருகின்றார்: - 'பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான்' (43) புண்கள் பூக்களாம்; அனுமன் பூத்த மரமாம். அரக்கர்கள் தன் மேல் எய்த அம்புகளை எல்லாம், காற்றால் கலைந்து ஒடும் முகில்கள் போல் சிதறும்படி, இரும்புத் தடியால் விலகச் செய்தான் அனுமான்: 'ஐயன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன, எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல் வித்தான்' (45) துதிக்கையைத் தூக்கிக் கொண்டு வந்த யானைகளை அனுமன் வீழ்த்தியது, பாய் மரக்கப்பலகள் கடலில் கவிழ்ந்: தாற்போல் தோன்றிற்று: தீதுறு பொறியுடைச் செங்கண் வெங்கைமா மீயுறத் தடக்கையால் வீரன் வீசுதோறு ஆய்பெருங் கொடியன கடலின் ஆழ்வன பாயுடை நெடுங்கலம் படுவ போனறவே' (38),