பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 நான் எண்ணி ஏமாந்தேன். தீயவரின் வஞ்சகத்தைத் தீயவரே அறிய முடியுமே தவிர; (என்போன்ற) தூயவர் அறிய முடியுமோ? -என்று கூறினாள் : "தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் தூயவர் துணிதல் உண்டோ நும் முடைச் சூழல் எல்லாம்? ஆயமான் எய்த, அம்மான், இளையவன் அரக்கர் செய்த மாயம் என்றுரைக்கவேயும் மெய்யென மையல் கொண்டேன்' (48) தீயவர் தீய செய்தல்......துரயவர் துணிதல் உணடோ? என்பது பொது உண்மை. அனுமன் அசோகவனத்தை அழித்துச் சூறையாடிய போது பல பொருள்கள் சிதைந்தன; அரக்கர் நடுங்கி அழிந்தனர்; கேடு சூழ்ந்தவர்கள் பிழைக்க முடியுமா? 'விட்டனன் இலங்கை தன்மேல்;விண் உற விரிந்தமாடம் பட்டன பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற; சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும் கெட்டனர் வீரர் அம்மா! பிழைப்ப ரோகேடு சூழ்ந்தார்?' (54) கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ? (மாட்டார்) என்பது பொது உண்மையாகும். அனுமனை இகழ்ந்த அக்ககுமாரனை நோக்கி அவன் தேர்ப்பாகன் இடித்துரைக்கின்றான்: ஐ பனே! யான் கூறு வது கேட்க! நம் மன்னன் ஆராவணனை எதிர்த்து வென்றது வாலி என்னும் குரங்கினமேயாகும். எனவே, உலகியலை-உலகில் நடக்கக் கூடியதை இன்னது என்று நாம் வரையறுத்தல் முடியாது- என்று கூறுகிறான்.