பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 'உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருள் மேல் தரும்வினை புணர்ப்பது சமாதியாகும்.' - (25) என்பது தண்டியலங்கார நூற்பா பெரும்பாலும் வினை அவ்வாறு புணர்த்துச் சொல்லப் படும், சிறு பான்மை பெயர்ச்சொல்லும் அவ்வாறு சொல்லப் படுவது உண்டு: கன்னி எயில், குமரிஞாழல்-என்பன வற்றை எடுத்துக் கொள்ளலாம். எயில்=மதில். ஞாழல் = ஒரு மரம். புதிய மதில் கன்னி எயில் எனவும் இளமரம் குமரிஞாழல் எனவும் சொல்லப்பட்டுள்ளன. கன்னி, குமரி என்பன உயிர் உள்ள பொருள்கட்கும் உயர்திணைப் பொருள்கட்கும் உரியன, ஆனால், உயிரற்ற மதில் கன்னி என்றும், மரமாகிய அஃறிணைப் பொருள் குமரி என்றும் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெயர்ச் சொற்களும் சில இடங்களில் அமைவது உண்டு. ஒப்புப் பொருள் மேல் வினை புணர்ப்பதால், சமாதி அணிக்கு, ஒேப்பு வினைப்புணர்ப்பு அணி என்னும் பெயர் தமிழில் தரப்பெற்றது. இனி, இதை அடிப்படையாகக் கொண்டு. கம்பரிடம் செல்வோம்: அனுமன் கடலைத் தாண்ட மயேந்திர மலையினின் றும் உந்தி எழுந்ததும், மரங்கள்-குன்றுகள் முதலியனவும். தாமும் பாய்வதுபோல் விண்நோக்கிச் சென்றன: "தாமும் பாய்வன என்ன வானம் படர்ந்தன”. (1-16). உயிருள்ள பொருள்களின் வினையாகிய பாய்தல்' என்பது, உயிரற்ற பொருள்களின் மேலும் புணர்க்கப்பட் டுள்ளதால் இது ஒப்புவினைப் புணர்ப்பு (சமாதி) அணி யாகும். (l என்பது படல எண்: 16 என்பது பாடல். எண் ஆகும்.)