பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 象 என அரக்க மகளிர் மாடத்தின் உச்சியில் ஏறி மேகத்தைப் பொத்துச் சொரியும் நீரில் குளிக்கின்றனர்: 'உழை உழைப் பரந்தவான யாற்று நின்று உம்பர் நாட்டுக் குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பில எனறு ஊடி, இழை தொடுத் திலங்கும் மாடத்திடைத் தடுமாற ஏறி, மழை பொதித்து ஒழுகுநீரால் மஞ்சனம் ஆடுவாரை" (182) ஞாயிறின் தோற்றத்தைக் கம்பர் பின்வருமாறு கற் பனை செய்கிறார்: சீதை தன்னிடம் இருந்து ஒளி மிக்க சூடாமணியை, தன்னைக் கண்டதற்கு அடையாளமாக இராமனிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுமன் கையில் கொடுத்துவிட்டாள். அதை அனுமன் எடுத்துக் கொண்டு போய் விடப் போகிறான். எனவே, அதற்குப் பதிலாக, கடல் ஒரு மணியைத் தந்தாற்போன்று கீழ் கடலி லிருந்து ஞாயிறு தோன்றிற்று-என்பது கம்பரின்கற்பனை. பாடல் : 'உறுசுடர் குடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு அறிகுறி யாக விட்டாள் ஆதலால் வறியள் அந்தோ? செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான்' (சூடாமணிப் படலம்-45) இலங்யிைன் எடுப்பான தோற்றம் அடுத்துக் கம்பர் இலங்கையின் எடுப்பான தோற்றம் குறித்துப் புனைந்துள்ள கற்பனைகளை ஒரளவு காண் போம் :