பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இலங்கை நகரை அமைப்பதற்கு நல்ல நாள் பார்த்துத் தொடங்கினராம். உலகியலில் கட்டடம் கட்டவும் நல்ல நாள் பார்த்துத் தொடங்குகின்றனர் அல்லவா? இதற்கு *நாள் கொள்ளுதல்' என்னும் பெயர் வழங்கப்படும். கம்பர் தமது பாடலில் இதற்குக் கருவைத்தல்' என்று பெயர் கூறி யுள்ளார். குழந்தை பிறப்பதற்குத் தாயின் வயிற்றில் முதலில் கருதங்க வேண்டுமல்லவா? அது போன்றதே இதுவும்: - 'எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அத் திருவைக் கண்டனென் என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்; கருவைக்கும் நெடுநகரைக் கடலிடையே கரையாதே உருவைக் கொண்டு இன்னமும் நான் உளேனாகி உழல்வேனோ? (230) என்பது பாடல். இலங்கையில் சீதையைக் கண்டதாகச் சம்பாதி கூறியிருக்கிறான். கருவைத்து அழிக்க முடியாத வாறு அமைத்த இலங்கையை யான் இன்னும் கடலிலே கரைத்து அழிக்காமல், வீணே உடலைச் சுமந்து கொண்டி ருக்கின்றேனே என அனுமன் கூறுகிறான். சிறுபாண் ஆற்றுப் படை என்னும் நூலிலும், 'கருவொடு பெயரிய நன்மா இலங்கை' (119) என இலங்கை குறிப்பிடப் பெற்றுள்ளது. இதற்கு, 'கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அ மித் தற் கரிய முறைமையினையுடைய இலங்கை' என நச்சினார்க் கினியர் பொருள் வரைந்துள்ளார். சீதை அசோகவனத்தில் பழைய செய்திகளை எண்ணி வருந்துகிறாள்: விராதன் என்பானது சாபத்தை மாற்றிய இராமனை எண்ணி, இன்னும் தனக்கு நல்லது கிடைக்க வில்லையே என வருந்துகிறாள்.