பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 'மானுயர் இவர் என மனக்கொண்டாய் எனின், கானுயர் வரை நிகர் கார்த்த வீரியன் தானொரு மனித னால் தளர்ந்துளான் எனின், தேனுயர் தெரியலான் தன்மை தேர் தியால்' (123) 'ஆயிரம் தடக்கையால் நின் ஐந்நான்கு கரமும் பற்றி வாய்வழிக் குருதி சோரக் குத்திவான் சிறையில் வைத்த தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைத்த நீ அறிந்திலையோ? நீதிநிலை அறிந்திலாத நீசா!'(131) கார்த்த வீரியன் இரு கால்களும் ஆயிரம் கைகளும் உடையவன். ஒர் ஆற்றங் கரையில் இராவணன் சிவபூசனை செய்துகொண்டிருந்தான். அந்த இடத்திற்கு முன்னால் கார்த்த வீரியன் தன் மனைவியருடன் நீர் விளையாட்டு செய்து கொண்டிருந்தான்; தன் ஆயிரம் கைகளாலும் ஆற்றுத் தண் ணிரை அணைபோல் அடக்கி ஓடாமல் செய் தான், பின் திடீரெனக் கைகளை எடுத்ததும், கட்டுண்டி ருந்த நீர் விரைவாக ஒடி இராவணனின் பூசனைப் பொருள்களை அடித்துச் சென்றது. இதனால் சினம் கொண்ட இராவணன் கார்த்த வீரியனுடன் போர் புரிந் தான். கார்த்த வீரியன் இராவணனைக் குருதி சொரியக் குத்தி வென்று சிறையில் இட்டான். பின் புலத்தியர் வேண்டிக் கொண்டதால் இராவணனை விடுதலை செய்தான். கார்த்த வீரியன் சமதக்கினி முனிவருக்குத் தொல்லை தந்ததால் முனிவரின் மகனாகிய பரசுராமன், கார்த்த வீரியனின் ஆயிரம் தோள்களையும் வெட்டிக் கொன்றான். அத்தகைய பரசுராமன், இராமன் சீதையை மணந்து அயோத்திக்குத் தி ரு ம் பி க் கொண்டிருந்தபோது இராமனோடு மோதியதால், இராமன் பரசுராமனது வில்லை ஒடித்து அவனை வென்றனன். இந்தப் புராண வரலாறுகள் கம்பரின் பாடல்களில் அமைந்துள்ளன.