பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 புருடர் தம் சூடாமணி நிகண்டில் திங்களைக் குமுத நண்பன்' என்றும் கூறியுள்ளனர். தனிப்பாடல் திரட்டுச் செய்யுள் ஒன்றில், - 'காமக் கருத்தா குமுதநாதன் கங்குல் வரக்கண்டும்' எனத் திங்கள் குமுதநாதன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. குமுதமும் ஆம்பலும் ஒன்றே. ஆம்பலுக்கு அதை மலரச் செய்யும் திங்கள் நாதனாகவும்- சகாயனாகவும்நண்பனாகவும் புலவர் சிலரால் கூறப்பட்டுள்ளான். அதே ஆம்பலுக்கு, அதைக் குவியச் செய்யும் ஞாயிறு பகை வனாகக் கம்பரால் இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளான் கம்பர் ஞாயிற்றையும் திங்களையும் பெரும்பாலும் ஆண் பாலராகவே கூறியுள்ளார். உலகம் அழியும் ஊழிக்காலம் பற்றிக் கம்பர் பல இடங்களில் கூறியுள்ளார். அனுமன் அரக்கர்களால் பிணிக்கப்பட்ட போது சீதை வருந்தினாள்: கணையாழி காட்டி என் உயிரைக் காத்த அனுமனுக்கு ஊழி காட்டுவேன்' என்று கூறினேனே அது பொய்த்து விடும் போலும் - என வருந்தினாள்: 'ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு ஊழி காட்டுவென் என்றுரைத்தேன்.' (-பிணி வீட்டு படலம்-33) ஊழி காட்டுவென் என்றால், உலகம் அழியும் ஊழிக் காலம் வரையும் நீ வாழ்வாயாக என்று வாழ்த்தியதாகப் பொருள் கொள்ள வேண்டும். உலகியலில் கூட, உலகம் உள்ள அளவும் வாழ்க- என உரைப்பது உண்டன்றோ? உலகியலில், கணவனை இழந்த பெண்டிரின் தாலியைக் களைதல் என்னும் ஒரு நிகழச்சி குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்கும். இதற்குத் தாலி வாங்குதல் என்று பெயர் கூறுவர். தாலி அறுத்தல்' என்பதாகச் சிலர் சொல்வர். என் தாலி அறுக்கிறான்' என்று சினத்தில்