பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கட்குச் செல்வது கடினமாயிருக்கிறதாம். இதற்கு மயில் ஒப்புமையாக்கப்பட்டுள்ளது. 'மென்தொழில் கலாப மஞ்ஞை வேட்கைமீக் கூரு மேனும் குன்றொழித் தொருமாக் குன்றின் அரிதின் சேர் g கொள்கை போல வன்றொழில் கொற்றப் பொன்தோள் மணந்தரு மயிலே அன்னார் ஒன்றொழித் தொன்றின் ஏக அரியதோள் ஒழுக்கினானை" (213). (காட்சிப் படலம்) காதலரின் பிரிவைப் பற்றிப் புலவர் பலர் ஆயிரக் கணக்கான பாடல்கள் பாடியுள்ளனர். கம்பர் இங்கே சீதையின் பிரிவைப் பற்றி ஒரு புதுமை படைத்துள்ளார். உலகில் உள்ள காதலர்களின் பிரிவுகள் எல்லாம் சேர்ந்து ஒர் உரு எடுத்ததுபோல் சீதை காணப்பட்டாளாம். இஃது: ஒரு புதுமை யன்றோ? 'உரிய காதலின் ஒருவரோ டொருவரை உலகில் பிரிவெனும் துயர் உருவு கொண்டா லன்ன பிணியாள்" (7): அசோக வனத்தில் சீதை தூங்கவேயில்லை என்பதை 'இராப் பகல் இல்லான்’ (16) என்னும் தொடரால் கம்பர் குறித்துள்ளார். முடி சூடிக் கொள் என்ற போதும், முடி துறந்து காடு. ஏகு என்ற போதும் ஒரே மாதிரியான ம்லர்ச்சியுடன் இராமன் முகம் இருந்ததாம், இந்த முக மலர்ச்சிக்குத் தண்ணிரில் உள்ள தாமரை மலரை ஒப்புமை காட்ட முடியாது; ஏனெனில் அது அசையும்-இரவில் குவிந்து, விடும். ஆனால், சித்திரத்தில்-(ஒவியத்தில்) எழுதப்பட்ட