பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மலர்ந்த தாமரை என்றுமே அசையாமல் குவியாமல் ஒரே மாதிரியாயிருக்கும் அந்த உவமையைக் கம்பர் கூறியுள்ளார். ' மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்' (20) என்பது பாடல் 'சித்திரத்துச் செந்தாமரை” என்றதும், ஜான் கீட்சு (John Keats) என்னும் ஆங்கிலப் புலவர் @L öflu ODE ON A GRECIAN URN STsip utl_& நினைவுக்கு வருகிறது. ode= கிரோக்கப் பாடல் வகை Grecien urn = கிரோக்கப் பாணிச் சால் (கொள்கலம் ) ஒரு கிரேக்கச் சாலின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் ஒவியங்கள் (சித்திரங்கள்) வரையப்படடுள்ளன. என்றும் மாறாத-ஒரே நிலையில் உள்ள ஒவ்வோர் ஒவியத்தையும் ஒருவன் விளித்துச் சொல்வதுபோல் பாடல் அமைக்கப் பெற்றுள்ளது. யாராலும் கொண்டு செல்ல முடியாத அமைதியான பெண்-நன்கு பேணி வளர்க்கப்படும் ஒலியெழுப்பாத குழந்தை-விருப்பம் இல்லாத கன்னிப் பெண்ணை ஆண் மகன் காம வெறி பிடித்துத் தொடர்கிறான். அவன் தொடாதபடி பெண் போராடித் தப்பித்துத் கொள்கிறாள். (தொடர்வது போன்ற படத்தில் ஆனுக்கும் பெண்ணுக்கும் இடைவெளி இருக்கும் மல்லவா? அதுதான், தொடர முடியாத-தொட முடியாத நிலை எனப்படுகிறது. அந்த இடைவெளி எப்போதும் இருந்து கொண்டேதானே இருக்கும்). இன்னியங்கள் இசைக்கப்படுகின்றன; களி வெறி காணப்படுகிறது.