பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 8 ( gap)

  (Left)              
           சுந்தரகாண்டச்

மானது. இதை வைத்துக் கொண்டு ஒருவர் பின்வருமாறு கூறினார்: இராவணன் சீதையின் தலைமயிரை ஒரு கையாலும் துடையை மறுகையாலும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனான் - என்பது அவர் கூறியது. இவ்வளவு மட்டமான பேச்சுக்குத்தொடக்கப் புள்ளி (Starting Point) வால்மீகியே. இதை வைணவர் பலர் வெறுக்கின்றனர்.மனம் நொந்து வேகின்றனர். இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போனான் என்று நாகரிகமான முறை யில் வால்மீகி எழுதியிருக்க வேண்டும். இது என் கருத்து. வால்மீகி கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதால், வால்மீகி வம்பு செய்துள்ளார்' என்று நான் என் நூலில் எழுதி யுள்ளேன்.

 அடுத்துக் கம்பரிடம் வருவோம். கம்பர் தமிழ் கற்றவர்களை ஏமாற்றியுள்ளார் என்று யான் எழுதியிருப்பதற்குக் காரணம், கம்பரது பொய்ச் செய்தியே யாகும். அதாவது, இராவணன் சீதை இருந்த குடிலை அகழ்ந்து தூக்கிக்கொண்டு போனான் என்பது நடக்கக் கூடியதா? அறிவியல்-பகுத்தறிவு என்னும் சொற்களைப் பயன்படுத் தாமலேயே இங்கே எண்ணிப்பார்ப்போம். இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற பொய்ச் செய்தி களால் தான், சிலர் கம்பரையும் கம்பராமாயணத்தையும் தாழ்த்திப் பேசுகின்றனர். இலக்கியம் என்ற முறையில் கற்பனைகள் இருக்கலாம். ஆனால், குடிலோடு அகழ்ந்து சென்றான் என்பது இலக்கியக் கற்பனையன்று - பொய்க் கதையேயாகும். இதனால்தான், கம்பர் தமிழ் அறிந்தவர்களை ஏமாற்றியுள்ளார் என்று எழுதியுள்ளேன். இராவணன் சீதையைக் கடத்திக்கொண்டு போனான் என்றே கம்பர் எழுதியிருக்கவேண்டும். கம்பர் இங்கே பொய் சொன்னதால் இறுதிவரையும் பொய்யே சொல்லிக் கொண்டு போகநேர்ந்தது. நான் இங்கே கம்பரின் கதை