பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி

   (Gap)                    7      
   அவர் அமர்ந்ததும், தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு இசுமாயீல் பின்வருமாறு ஒரு கருத்தைச் சொன்னார்: "திருமாலும் திருமகளும் இராமனாகவும் சீதையாகவும் அவதரித்ததாக 

எங்கேயும் அறிவிக்கப்படவில்லை" என்று கூறினார். தமது கருத்து மறுக்கப்பட்டதால், பார்த்தசாரதி முகம் சுருங்கித் தலை குனிந்து கொண்டார். இதை அறிஞர் இசுமாயீல் கவனித்திருக்க முடியாது. என் பக்கத்தில் அமர்ந் திருந்த சிலர் நீதிபதி கூறுவது சரியில்லை என்று பேசிக் கொண்டனர். யான் அப்போது,

 "கருங்கடல் பள்ளியில் கலவி 
 நீங்கிப் போய் பிரிந்தவர் 
 கூடினால் பேசல் வேண்டுமோ"

என்னும் பாடலின் கருத்து என்ன என்று நீதிபதியைக் கேட்கலாமா என்றெண்ணினேன். பெரியவர்களைப்பற்றிய மட்டில் அடக்கமாயிருக்கவேண்டும் என வாளா இருந்து விட்டேன். இதை, கம்பன் கழகச் செயலாளர் புலவர் கம்பவாணர்- திரு அ. அருணகிரியவர்களிடம் கூறி நீதிபதி சொல்லியது சரியா என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டார். அவரது சிரிப்பு, நீதிபதியின் கருத்து சரியில்லை என்று கூறியதுபோல் தென்பட்டது.

"வால்மீகி வம்பு செய்துள்ளார் . . . கம்பர் தமிழ் கற்றவர்களை ஏமாற்றியுள்ளார்" என யான் எழுதியிருப்பதை மட்டமான மதிப்புரையாளர் குறிப்பிட்டு, எந்தக் கருத்தில் இந்நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார் என்பது தெரியவில்லை என்பதாக அறிவித்துள்ளார்.
   நான் எந்தக் கருத்தில் இவ்வாறு எழுதினேன் என்பதைத் தெரிவிக்கிறேன்: இராமனும் சீதையும் தெய்வங்களாகப் போற்றப்படுபவர்கள். இந்த நிலையில், இராவணன் சீதையின் உடலைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போனான் என வால்மீகி எழுதியிருப்பது மிகவும் கொச்சைத்தன