பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி (gap) 9

யமைப்பை மட்டுமே மறுக்கிறேன். கம்பரது கவி நயத்தை-இலக்கிய இன்பத்தை அமிழ்தமாகச் சுவைக்கிறேன். கதையமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு வேண்டியது இலக்கிய இன்பமே. காப்பியத்தால் அறியக்கூடிய பொது அறநெறியும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இதுதான் திறனாய்வு ஆகும்.

அண்டப்புளுகும் ஆகாயப்புளுகும் 
 யான் எழுதியுள்ள அண்டப்புளுகு - ஆகாயப்புளுகு என்னும் தொடரைப்பற்றி மட்டமான மதிப்புரையாளர் கிண்டல் செய்துள்ளார். யான் எழுதியிருப்பது வருமாறு:'
கழக (சங்க) இலக்கியங்களில் அண்டப்புளுகுகள் ஆகாயப் புளுகுகள் இன்றி, ஒரளவு இயற்கையோடு தோய்ந்த கற்பனையே இருக்கும்... எல்லாம் வளர்வது போல், கற்பனையும்,கம்பர் காலமாகிய இடைக்காலத்திலும் அதற்கும் பிற்காலத்திலும் வளர்ச்சி பெற்று-உண்மைக்கு மேலும் புனைந்துரைக்கப்பட்டு, 'அண்டப்புளுகு - ஆகாயப் புளுகு' என்ற நிலையை அடைந்து விட்டது'-என்பது யான் எழுதியிருப்பது.
 அண்டப்புளுகு-ஆகாயப்புளுகு என்ற தொடர், மட்டமான மதிப்புரையாளர்க்கு மட்டமாகத் தோன்றியிருக்கிறது. அவர் கூறியிருப்பது: நூலாசிரியர் அண்டப்புளுகு ஆகாயப்புளுகு என்பதை இரண்டிடங்களில் கூறியிருக்கிறார்; அவருக்கு இதில் மிகவும் ஆசை போலும் என்று கிண்டல் செய்துள்ளார்.
'அண்டப்புளுகு - ஆகாயப்புளுகு என்பது ஒருவகை வட்டார வழக்கு. இந்தக் காலத்தில் சில நிறுவனங்கள், பல இடங்கட்கும் தக்கவரை அனுப்பி வட்டார வழக்குச் சொற்களையும் தொழில்கலைச் சொற்களையும் திரட்டிவரச் செய்கின்றன. இவற்றை யான் கூடத் திரட்டியுள்ளேன்'