பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 (gap)

               சுந்தரகாண்டச்

ஆனால் மட்டமான மதிப்புரையாளர்க்கு, இதுகிண்டலுக்கு உரியதாகத் தோன்றியிருக்கிறது. அண்மையில் என்னிடம் பேசிக்கொண்டிருந்த கா. வில்லவன் என்னும் எழுத்தாளர் அண்டப்புளுகு-ஆகாயப்புளுகு எல்லாம் புளுக நம்மால் முடியாது என இயற்கையாகச் சொன்னதை யான் கவனித்தேன். நான் நிகண்டுகள் படித்தவன்; நிகண்டுகள்அகராதிகள் ஆகியவை பற்றிய தமிழ் அகராதிக்கலை’ என்னும் அரிய பெரிய நூல் எழுதிப் பரிசு, பாராட்டு, பட்டம், பெரும் புகழ்-பெற்றவன், சொல்லாராய்ச்சி செய்து பல நூல்கள் எழுதியிருப்பவன். இத்தகைய யான் கிண்டல் செய்யப்பட்டுள்ளேன். Star Value வாய்ப்பு எனக்குக் கிடையாது. மற்றும், அண்டப்புளுகு' என்பது சென்னைத் தமிழ்ப் பேரகராதியிலும் (Lexicon) உள்ளது. இத்தனை அண்டங்களைக் கட்டி ஆண்டான்-ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்டான் என்பன போன்றன அண்டப் புளுகாகும். ஆகாய மார்க்கமாகப் பறந்தார்.மேலே பறந்து முனிவர்கள் கங்கையைத் தாண்டினார்கள்-போன்றன ஆகாயப்புளுகாகும். கழக இலக்கியங்களில் இத்தகையன இல்லை - கம்பராமாயணத்தில் உண்டு. எனது உரை திறனாய்வாகும். பட்டி மண்டபம்: 'அனுமன் தேடிய இடங்களில் பட்டி மண்டபமும் ஒன்று. இக்காலத்தில் பட்டி மண்டபம் இல்லாத சொற்பொழிவு விழாக்கள் இல்லை எனலாம். பட்டி மண்டபம் பேச்சாளர் பலர்க்குப் பணமும் தருகிறது. பட்டி மண்டபம் பல நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது-' என யான் எழுதியுள்ளேன் கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் மணிமேகலை, திருவாசகம் ஆகிய நூல்களில் பட்டி மண்டபம் பற்றிக் கூறியுள்ள பாடல் பகுதிகளையும் எடுத்துத் தந்துள்ளேன்.