பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 சுந்தரகாண்டச்

விடுகிறேன். இதுபற்றி

என்நூலில் உள்ள இரண்டே கால் பக்கச் செய்திகள் வருமாறு:-
 "சுக்கிரீவன், தன் மனைவி உருமை என்பாளை அண்ணன் வாலி பற்றிக்கொண்டு தன்னையும் துரத்தி விட்டதால், இராமனது நட்பைப் பெற்றுத் தனக்கு உதவி புரியும்படி வேண்டினான். உடனே இராமன் வாலியிடத்திலிருந்து அரசையும் உருமை என்பாளையும் மீட்கா முன்னே, அரசையும் உருமையையும் சுக்கிரீவனுக்குத் தந்துவிட்டதாக உறுதி கூறிப் பின்பு வாலியைக் கொன்றான்."
"ஓவியர்க்கு எழுத ஒண்ணா 
உருவத்தன்உருமையோடும் 
கோஇயல் செல்வம் முன்னே 
கொடுத்துவாலியையும் 
கொன்றான்' 
    (பிணி வீட்டு படலம்-81)

என்பது பாடல் பகுதி. வாலியைக் கொல்வதற்கு முன்பே சுக்கிரீவனுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டதாக இராமன் உறுதி கூறினான் என்னும் கருத்தாளுமையைக் கம்பர், தமக்கும் முன்னோடிகளான தொல்காப்பியர், கழகப் (சங்கப்) புலவர்கள் முதலியோரிடம் கற்றுக் கொண்டிருப்பார் எனத் தோன்றுகிறது; அவர் கல்வியில் பெரியவராயிற்றே! தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில், ' கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் (12-1) என்பதாக ஒரு கொற்றம் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும் - கழிந்தது பொழிந்தென என்னும்