பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. ,

சுந்தரகாண்டச்

சுந்தரகாண்டச்

"அரியஎல்லாம்எளிதினில் கொண்டு உரிய எல்லாம் ஒம்பாது வீசி" (145, 146) என்னும் பகுதிக்குப் பின்வருமாறு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். "பிறர்க்கு அரிய நுகர் பொருள்கள் எல்லாம் எளிதாக நின் ஊரிடத்தேயிருந்து மனத்தால் கைக்கொண்டு, அப்பொருளை எல்லாம் நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தே யிருந்து பிறர்க்குக் கொடுத்து" என்பது உரைப்பகுதி. (சிலர், பிறர் பொருள்களை, அவர்கள் கொடுக்காமலேயே, தாங்களாகவே திருடிக் கொள்கிறார்களே - அவர்களும் தொல்காப்பியத்தையும் கழக இலக்கியங்களையும் பின்பற்றுகின்றனரோ - அந்தோ!) ,நான் மேலே அடைப்புக் குறிக்குள் கொடுத்திருப்பதை, மட்டமான மதிப்புரையாளர், தொல்காப்பியமும் கழக இலக்கியங்களும் திருடுவதை ஆதரிக்கின்றன; அவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் திருடுகின்றனர் என்று நான் உடன்பட்டுக் கூறுவதாக எண்ணி என்னை மிகவும் மட்டப்படுத்தி எழுதியுள்ளார். ,இது, திருடர்களைக் கிண்டல் பண்ணுவதாகும். அரசர்கள் பிறர் ஊரைக் கொள்வதற்கு முந்தியே கொடுக்கிறார்களே - நாமும் உடையவர் தராமலேயே திருடிக் கொள்வோமே என்று எண்ணிச் செய்கின்றனர் போலும் என்று நையாண்டி செய்வதாகும் இது. இந்த நையாண்டிச் செயலுக்கு ஆங்கிலந்தில் SATIRE என்று பெயராம். பேரறிஞர் ஒருவரிடம், இதைக் கூறியபோது, அவர் உடனே, இது Satire அல்லவா? நீங்கள் எழுதியிருப்பதில் தவறு இல்லையே என்று கூறினார். நான் அந்தோ!' என்று இறுதியில் எழுதியிருப்பதை மட்டமான மதிப்புரையாளர் நன்கு கவனிக்கவில்லை போலும். அந்தோ என்பதற்கு,